செய்திகள்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2016-09-16 16:01 IST   |   Update On 2016-09-16 16:01:00 IST
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

திருப்பூர்:

மத்திய அரசு நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிட். சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

மேலும், திருப்பூர் ஏற்றும தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனைக்கு உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துவதற்காக ரூ.4 லட்சத்திற்கு நிதியுதவிக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினர்.

மேலும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிக்காக சுத்திகரிப்பு எந்திரத்தினையும் கலெக்டர் ஜெயந்தி இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இணை இயக்குநர் விஜய குமார், மாவட்ட அரசு தலைமை மருத்து மனை கண்காணிப்பாளர் கேசவன், உறைவிட மருத்துவர் ரத்தினசாமி, பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா கூடுதல் பொது மேலாளர் மேத்யூ, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், சண்முக சுந்தர், ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News