செய்திகள்
பேரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்- மனைவி படுகாயம்
பேரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்- மனைவி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி பேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பேரூர்:
கோவை பேரூர் அருகே காளம்பாளையம் டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் மணி (வயது 62). ஓவியர். இவரது மனைவி நாகரத்தினம் (57).
நேற்று இரவு வீட்டில் மின்சாரம் தடைப்பட்டது. அப்போது இரவில் கியாஸ் சிலிண்டர் சுவிட்சை ஆப் செய்யாமல் மறந்து விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இன்று அதிகாலை மணி வீட்டில் மின்விளக்கை போட்டார்.
அந்த சமயத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்ததால் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டில் இருந்த மணி மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகியோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். இதில் உயிருக்கு போரா டிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி பேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.