செய்திகள்

மாமல்லபுரம் அருகே 4-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

Published On 2016-08-31 15:33 IST   |   Update On 2016-08-31 15:33:00 IST
மாமல்லபுரம் அருகே 4-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவள் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை மோசமாக உள்ளது.

Similar News