செய்திகள்
தாம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் கொள்ளை
தாம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் முடிச்சூர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் படுக்கை அறையில் தூங்கினார்.
இன்று காலை எழுந்து வெளியே வர அறையை திறக்க முயன்ற போது கதவு திறக்கவில்லை. அது வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது உடனே பரமேஸ்வரன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர்.
நேற்று இரவு வீட்டு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
மேலும் பரமேஸ்வரன் சத்தம் கேட்டு வெளியே வந்து விடாமல் இருக்க படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டி உள்ளனர்.
இதுகுறித்து பிர்க்கன் கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.