செய்திகள்
கிண்டியில் பேராசிரியர் வீட்டில் துணிகர கொள்ளை
கிண்டியில் பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆரிப் சபினி (37), தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ15 ஆயிரம், மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கபட்டு இருந்தது. மேலும் ஒரு லேப்டாப்பும் கொள்ளை போனது.