செய்திகள்

தண்டையார்பேட்டையில் வியாபாரியிடம் வழிப்பறி - கொள்ளையன் கைது

Published On 2016-08-18 14:42 IST   |   Update On 2016-08-18 14:42:00 IST
தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியிடம் வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் உசேன். இரும்பு வியாபாரி. நேற்று இரவு தண்டையார்பேட்டை ராமானுஜர் தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மர்ம வாலிபர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் உசேனிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்து தப்பிச் செல்ல முயன்றார். அதிர்ச்சி அடைந்த உசேன் கூச்சலிட்டார்.

அந்த நேரத்தில் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். சத்தம் கேட்டு வந்த அவர்கள் தப்பி ஓட முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த கானா ராஜசேகர் என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

ராஜசேகர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளான். அவனுக்கு வேறு எந்தெந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடந்து வருகிறது.

Similar News