செய்திகள்

ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

Published On 2016-08-17 17:24 IST   |   Update On 2016-08-17 17:24:00 IST
வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 4 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருப்பசாமி, பாஸ்கர், கருணாகரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் துரை மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது 4 தனியார் ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், சாலைவரி செலுத்தாமலும் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிலிருந்த பயணிகளை வேறு பஸ்களில் அனுப்பி வைத்து 4 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆம்னி பஸ்களும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

Similar News