செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே காளான் சாப்பிட்ட 4 பேர் மயக்கம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே காளான் சாப்பிட்டு 4 பேர் வாந்தி பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மனைவி கருணாவதி(40).
கருணாவதி தன்னுடைய வீட்டில் காளான் சமைத்திருந்தார். இதனை கருணாவதியும், அவருடைய மகன்கள் உதயக்குமார்(18), ராஜ்குமார்(13), மகள் தேவிகா(16) ஆகிய 4 பேரும் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் 4 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கினர். அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு காளான் சாப்பிட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.