செய்திகள்

மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: கண்டக்டர் பலி

Published On 2016-07-20 14:43 IST   |   Update On 2016-07-20 14:43:00 IST
மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் கண்டக்டர் பலியானார்.
மதுராந்தகம்:

சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. கண்டக்டராக குமார கிருஷ்ணன் இருந்தார். அதிகாலை 4 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கண்டக்டர் குமார கிருஷ்ணன் பலியானார். மேலும் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News