செய்திகள்
போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
மானாம்பதி போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள போலீஸ்நிலைய வளாகத்தில் சிறப்பு உதவிஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸ்காரர் சுதாகர், தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து இருந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. போலீசார் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதை கண்டு உடனடியாக அணைக்க முற்பட்டார்கள். ஆனால் 2 மோட்டார்சைக்கிள்களும் முழுவதும் எரிந்து போயின. மர்மநபர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டனரா? அல்லது மோட்டார்சைக்கிளில் ஏற்பட்ட ஏதாவது கோளாறு காரணமாக தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.