செய்திகள்
பவானி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி:
பவானி தேவபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் ஹரிதா (வயது 21). இவர் பி. பி. எம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து படித்து கொண்டு இருந்தார்.
இதன்பிறகு வெளியில் சென்ற சரிதாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.
இது பற்றி பவானி போலீசில் அவரது தந்தை ரவிகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஹரிதாவை தேடி வருகிறார்கள்.