செய்திகள்
கத்திப்பாரா மேம்பாலத்தில் வெயிலுக்கு மயங்கி விழுந்த முதியவர் பலி
கத்திப்பாரா மேம்பாலத்தில் வெயிலுக்கு மயங்கி விழுந்த முதியவர் பலியானார்.
ஆலந்தூர்:
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கடந்த 12-ந்தேதி 55 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். வெயில் தாங்க முடியாமல் அவர் திடீர் என மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி காலை இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.