செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது

Published On 2016-06-16 16:11 IST   |   Update On 2016-06-16 16:12:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பெண் சென்னையைச் சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு என்ற இடத்தில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த 23-ந்தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வசந்தி (47). சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர். ராமன் என்பவரது மனைவி ஆவார். சீட்டு பணம் நடத்தி வந்தார்.

அவரை கொன்றது யார்? என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News