செய்திகள்
சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. குரல் எழுப்பும்: விமான நிலையத்தில் கனிமொழி பேட்டி
சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக உறுதியான குரலை தி.மு.க. எழுப்பும் என்று சென்னை விமான நிலையத்தில் எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:
தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் தி.மு.க. பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். மக்கள் பிரச்சனைகளுக்காகவும், மக்களுக்கான நல திட்டங்களுக்காகவும் தி.மு.க. குரல் கொடுக்கும்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியபடி சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக உறுதியான குரலை தி.மு.க. எழுப்பும்.
தற்போது தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களின் பலம் அதிகரித்துள்ளது. கடந்த முறை போல் இந்த தடவை ஆளுங்கட்சி சட்டசபையில் நடந்து கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.