செய்திகள்

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2016-06-16 11:29 IST   |   Update On 2016-06-16 11:29:00 IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் அன்பரசு (வயது 27). தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

கடந்த 10-ந் தேதி அன்பரசு மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்க்க திருப்புலிவனத்தில் இருந்து படூர் நோக்கி சென்றார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் தவறி விழுந்தார்.

படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News