செய்திகள்

அறந்தாங்கி அருகே விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலி

Published On 2016-06-02 17:23 IST   |   Update On 2016-06-02 17:23:00 IST
அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் தனபால். வயது 55. ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மாலை 3 மணியளவில் அறந்தாங்கி வந்து தனது நண்பரான அறந்தாங்கி அண்ணா நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அ றந்தாங்கி–புதுக்கோட்டை சாலையில் வாகைமரம் அருகே சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை காளீஸ்வரன் ஓட்டியுள்ளார்.

அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களின் மோட்டார் சைக்கிளுடன், தனபால் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News