செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே தீயில் கருகிய கல்லூரி பேராசிரியை பலி

Published On 2016-06-02 15:53 IST   |   Update On 2016-06-02 15:54:00 IST
கந்தர்வகோட்டை அருகே தீயில் கருகிய கல்லூரி பேராசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் அருணாலம். இவரது மகள் இலக்கியா (வயது 26). எம்.இ. படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 24–ந் தேதி வீட்டில் சமையல் செய்யும் போது, இலக்கியாவின் சேலையில் தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இலக்கியா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 10 மாதமே ஆவதால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News