உள்ளூர் செய்திகள்

ஏழு கிணறு பகுதியில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-12-08 16:10 IST   |   Update On 2022-12-08 16:10:00 IST
  • 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இப்ராகிம் என்ற வாலிபரை கைது செய்தனர்.
  • பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை பார்சல் மூலம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவில் அறையை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துறைமுகம் உதவி கமிஷன் வீரகுமார், முத்தியால் பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா, சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சோதனை நடத்தினர். இதில் 200 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இப்ராகிம் என்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரது கூட்டாளிகளான துரை, டேவிட் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை பார்சல் மூலம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News