உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந்தை பேட்டை. தினசரி மார்க்கெட் பகுதியில் பயன்படுத்தி வந்த வியா பாரிகளிடம் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.