கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
பண்ருட்டி அருகே இட்லி வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் கைது
- பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
- வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பாப்பான் கொள்ளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம்இ வரது மகன் பழனிவேல்(35). இவர் சொரத்தான்குழி பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு மது போதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராமன் (24),சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த இனிய சம்பத் (23) இருவரும் பழனிவேல் இடம் ரூ.2000 மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பழனிவேல் சரியான வியாபாரம் இல்லை. இப்போது என்னால் தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரம டைந்த இருவரும் நாங்கள் ஊரில் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா நாங்கள் மாமுல் கேட்டால் தரமாட்டாயா என கேட்டு அசிங்கமாக திட்டி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த பழனிவேல் சட்டென சுதாரித்துக் கொண்டு வில கவே பக்கத்தில் கிடந்த முந்திரிக்கட்டை எடுத்து தலையில் அடித்துள்ளனர். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக் கொண்டு இனிமேல் நீ இங்கு கடை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் முத்தாண்டி குப்பம் எஸ்.ஐ.ராஜாராமன், டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.