உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-07-12 10:43 IST   |   Update On 2022-07-12 10:43:00 IST
  • தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக ேவலை பார்த்து வருகிறார். இவரது மகள் தர்ஷினி (வயது 22). டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த வாரம் தேனி கோட்டைக்குளம் உழவர் சந்தை பின்புறம் உள்ள சித்தி லதா வீட்டுக்கு வந்தார்.

அங்கிருந்து யாரிடமோ போனில் பேசி விட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி மேட்டு வலவு பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சந்திரசேகர் (வயது 24). இவரும் லோகேஸ்வரி (23) என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனிகாஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

மகளுக்கு மொட்டை எடுப்பதற்காக சந்திரசேகர் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் திருப்பூருக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News