உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
- நீச்சல் தெரியாத நிலையில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
- சின்னாற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த பாலக்கோடு கம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரவேல்.
இவரது மகன் மோகனலிங்கம் (வயது 10). இந்த சிறுவன் தங்களுக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தான். நீச்சல் தெரியாத நிலையில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இது குறித்து குமரவேல் தந்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பஞ்சப்பள்ளி அருகேயுள்ள ஜல் திம்மனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் தேவராஜ் (13) என்ற சிறுவன் சின்னாற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.