உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் தயார்

Published On 2022-06-11 11:31 IST   |   Update On 2022-06-11 11:31:00 IST
  • தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • தேனி மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.

தேனி:

தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறியது:-


மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 13-ந்தேதி திறக்கப்படுகிறது. இதில் 631 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 768 அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் தேனி, பெரிய குளம், உத்தமபாளையம் கல்வி மாவட்டங்கள் வாரியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு அந்தந்த பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News