செய்திகள்
ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் ப்ரோ 2 சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி (WWDC) அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறவுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ சாதனத்தை வெளியிடலாம் என கூறப்படுகிறது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ 2 மற்றும் மூன்று ஐபேட் சாதனங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 2 சாதனத்துடன் 10.5 இன்ச் ஐபேட், 10.0 இன்ச் மாடல் மற்றும் 9.7 இன்ச் ஐபேட் மினி 5 சாதனங்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபேட் ப்ரோ 2 சாதனத்தில் AX10 சிப்செட், 12 எம்பி பிரைமரி கேமரா, ட்ரூ-டோன் பிளாஷ் மற்றும் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட 9.7 இன்ச் கொண்ட ஐபேட் சாதனம் ஒன்றை வெளியிட்டது.
2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபேட் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் மேம்படுத்தப்பட்ட பிராசஸர், கேமரா மற்றும் புதுவகை ஐஓஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சில்வர், கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் ஐபேட் 9.7 மாடலில் அலுமினியம் யுனிபாடி என்குளோஷர் மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் ஆப்பிள் A9 சிப்செட் M9 மோஷன் கோ-பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 அப்ரேச்சர், 5P லென்ஸ் மற்றும் பல்வேறு கேமரா மோட்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வீடியோக்களை ஃபுல் எச்டி தரத்தில் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 9.7 இன்ச் மாடலிலும் 1.2 எம்பி ஃபேஸ்டைம் எச்டி கேமரா, f/2.4 அப்ரேச்சர் மற்றும் எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐபேட்களில் வை-பை, ப்ளுடூத், GPS, GLONASS மற்றும் எல்டிஇ பேண்ட் மற்றும் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது.