செய்திகள்

லெனோவோ Miix 510 லேப்டாப் இந்தியாவில் வெளியானது

Published On 2017-04-23 13:55 IST   |   Update On 2017-04-23 13:55:00 IST
லெனோவோ நிறுவனத்தின் புதிய Miix 510 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் லேப்டாப்கள் இரண்டு மாடல்களில் கிடைக்கின்றன.
புதுடெல்லி:

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய வகை லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத்தை புதிய வடிவில் வாடிக்கையாளர்களுக்கு  வழங்கும் விதமாக புதிய ரக Miix 510 எனும் டூ-இன்-ஒன் லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

லெனோவோ Miix 510 பிரத்தியேகமாக அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கும் இந்த சாதனம் i3 மற்றும் i5 என இரண்டு மாடல்களில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ.53,390 மற்றும் ரூ.79,890 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த லேப்டாப் கழற்ற கூடிய கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் லெனோவோ ஆக்டிவ் பென் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 880 கிராம் எடை கொண்ட Miix 510 எங்கும் எளிதில் எடுத்து செல்லக் கூடியதாகவும் இருக்கிறது. எல்டிஇ வசதி கொண்டுள்ள லேப்டாப் 7.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 



i5 பிராசஸர் கொண்ட மாடலில் 8ஜிபி LPDDR4 ரேம் மற்றும் i3 பிராசஸர் கொண்ட மாடலில் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 12.2 இன்ச் 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ப்ளூடூத், யுஎஸ்பி 3.0 டைப்-சி, மைக்ரோ சிம் ஸ்லாட் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் சமமாமக வழங்கப்பட்டுள்ளது.   

இரண்டு மாடல்களிலும் இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 520 வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் i3 மாடலில் 128ஜிபி SSD மற்றும் i5 மாடலில் 256ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5எம்பி பிரைமரி கேமரா மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Similar News