செய்திகள்
சங்ககிரி தொகுதி

சங்ககிரி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-04 15:57 GMT   |   Update On 2021-03-04 15:57 GMT
கடந்த இரண்டு முறையும் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ள சங்ககிரி தொகுதி குறித்து ஓர் பார்வை...
சங்ககிரி தொகுதியில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, தாரமங்கலம் ஆகிய ஒன்றிய பகுதிகள் உள்ளன. இத்தொகுதியில் பெருன்பான்மை வன்னியர் சமுதாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கவுண்டர், அருந்ததியர் என அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.



இங்கு, ஆண்வாக்காளர்கள் 1,38,013, பெண் வாக்காளர்கள் 1,35,110, மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,73,143 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1971 முதல் 2016 வரை, நடைபெற்ற 11 சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க., 7 முறையும், தி.மு.க. 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் கோரிக்கை

சங்ககிரியில் லாரி தொழில் பிராதன தொழிலாக உள்ளது. அதை சார்ந்து பல்வேறு தொழில்கள் உள்ளதால், ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையில் ஒன்றாகும். அதே போல், சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.



இந்த பாதை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதேபோல், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களும் அவ்வப்போது அரங்கேறும். இதனால், மேம்பாலம் அமைத்து தரக்கோரி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடந்தபாடு இல்லை. சங்ககிரி மலைக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இங்குதான் விடுதலை போராட்ட வீரர் தீரன்சின்னமலையை தூக்கிலிடப்பட்டார். இதனால், தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.



இங்கு சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும். கடந்த 2011-ம் ஆண்டு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டு, அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க., சார்பிலும், அவரை எதிர்த்து விஜயலட்சுமி பழனிசாமி அ.தி.மு.க.,விலும் போட்டியிட்டனர். இதில் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி பெற்றார். 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானார்.



சங்ககிரி அ.தி.மு.க., கோட்டையாக இருப்பதால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நேரடியாக களம் கண்டால் கடும்போட்டி நிலவும் என்பது அனைவரின் கருத்தாகும்.


சங்ககிரி தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்....



1957 கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர்- காங்கிரஸ்
1962 கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர- காங்கிரஸ்
1967 ஆர். நல்லமுத்து- திமுக
1971 வி. முத்து- திமுக
1977 ப. தனபால்- அதிமுக
1980 ப. தனபால்- அதிமுக
1984 ப. தனபால்- அதிமுக
1989 ஆர். வரதராஜன்- திமுக
1991 வி. சரோஜா- அதிமுக
1996 வி. முத்து- திமுக
2001 ப. தனபால்- அதிமுக
2006- வி. பி. துரைசாமி- திமுக
2011- விஜயலட்சுமி பழனிச்சாமி- அதிமுக
2016- ராஜா- அ.தி.மு.க.
Tags:    

Similar News