செய்திகள்

காமன்வெல்த் மகளிர் இரட்டையர் டேபுள் டென்னிஸ் - இந்திய ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது

Published On 2018-04-13 16:31 IST   |   Update On 2018-04-13 16:31:00 IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபுள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மாணிகா பத்ரா, மவுர்னா தாஸ் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. #CommonWealthGames2018 #CWG2018 #ManikaBatra #MournaDas

கோல்ட் கோஸ்ட்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபுள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மாணிகா பத்ரா, மவுர்னா தாஸ் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று டேபுள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மாணிகா பத்ரா - மவுர்னா தாஸ் ஜோடி, சிங்கப்பூரின் தியான்வே பெங் - மெங்யூ யூ ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், 11-5, 11-4, 11-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் ஜோடி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனால் இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியா 17 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #ManikaBatra #MournaDas

Similar News