செய்திகள்

2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி அறிவிப்பு

Published On 2016-04-25 14:02 IST   |   Update On 2016-04-25 14:02:00 IST
2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த வைகோ இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஒருமணி அளவில் பச்சை தலைப்பாகை, கருப்பு மேல்துண்டுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த வைகோ, அங்கு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று மனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு மாற்று வேட்பாளராக ம.தி.மு.க.வை சேர்ந்த வினாயக் ரமேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர், அலுவலகத்தை விட்டு வெளியேவந்த வைகோ பிரச்சார வேனில் இருந்தபடி ஒரு அறிக்கையை வாசித்தார். தனது சாதியை குறிப்பிட்டு மதமோதல்களை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதால் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News