செய்திகள்
மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் கருணாநிதிக்கு கிடையாது: ஜெயலலிதா கடும் தாக்கு
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் கருணாநிதிக்கும் தி.மு.க.வுக்கும் கிடையாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
காஞ்சிபுரம்:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 18 தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. முந்தைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே தி.மு.க வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையில் தி.மு.க. பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் மின்திருட்டு கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை, கச்சத்தீவை தாரை வார்த்தது ஆகியவற்றிற்கு தி.மு.க.வே காரணம். வெள்ள பாதிப்பின்போது எனது தலைமையிலான அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. தொற்றுநோய் ஏற்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட வெள்ள நிவாரணப் பணியை மத்திய அரசின் குழு பாராட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு பற்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தற்போது பேசி வருகின்றனர். நான் ஏற்கனவே கூறியதுபோல், மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு கருணாநிதிக்கோ, தி.மு.க.வுக்கோ தகுதி கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர்.
பூரண மதுவிலக்கு குறித்து தொடர்ந்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கருணாநிதி கூறினார். பூரண மதுவிலக்கு தி.மு.க.வின் கொள்கை என்றால் அதுபற்றி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவிலக்கு சட்டம் இயற்றப்படும் என்றும், டாஸ்மாக் கலைக்கப்பட்டு மதுவிற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். பூரண என்ற வார்த்தை அதில் இல்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கும், தி.மு.க.வுக்கும் கிடையாது.
என்னைப்பொருத்தவரை பூரண மதுவிலககு என்பதே எனது கொள்கையாகும். ஆனால், அதனை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. படிப்படியாகத் தான் கொண்டுவர முடியும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற இலக்கு எய்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.