செய்திகள்

இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2016-11-17 02:13 GMT   |   Update On 2016-11-17 02:13 GMT
பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர் களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு உரிய நிதிகளை அனுப்பிய பிறகும் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்காமல் தற்போது குறை கூறுவது சரியானதல்ல.

எந்த காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோல் தான் இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்துவிட்டது.

கள்ள ஓட்டை தடுக்க கை விரலில் மை வைப்பது போல், கள்ள பணத்தை தடுக்க மை வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைவது ஏன்? என புரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News