செய்திகள்
ஜனாதிபதியை சந்திக்க மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் டெல்லி பயணம்
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
ஆலந்தூர்:
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என்று தெரிவித்தது. மேலும் காவிரியில் நீர் திறந்து விட மறுக்கும் போக்கிற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் மறியலில் பங்கேற்று கைதானார்கள்.
இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியை இன்று சந்திக்க முடிவு செய்தனர்.
அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேச இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. ஜனாதிபதியை சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம். பிரதமரை சந்திக்கவில்லை.
பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்படுகிறது.
எனவே காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் அறிவுறுத்தும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.