செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வழிநடத்த கருணாநிதி சட்டசபை செல்ல வேண்டும்: தமிழிசை பேட்டி

Published On 2016-08-23 11:25 IST   |   Update On 2016-08-23 15:55:00 IST
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வழிநடத்த கருணாநிதி சட்டசபை செல்ல வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

இன்று காலை டெல்லி செல்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றம் ஆரோக்கியமற்றதாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை அனுசரித்து செல்ல வேண்டும்.

எதிர்க்கட்சியினர் தங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வர வேண்டும்.

அனைவரும் காவல் துறை மானிய கோரிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு காவல் துறை மானிய கோரிக்கை ஏமாற்றம் அளித்தது.

ஏன் என்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. இதை தடுக்க காவல் துறையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சட்டப்படி நடக்கவில்லை. அதனால் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது சரியே.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News