பெண்கள் உலகம்
null

கருச்சிதைவு ஏன் உண்டாகிறது? காரணம் தான் என்ன...?

Published On 2024-04-18 09:50 GMT   |   Update On 2024-04-19 07:10 GMT
  • பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம்.
  • கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனெனில் சில பெண்களுக்கு கருச்சிதைவு என்பது தாங்கள் கர்பம் என்று தெரியும் முன்னரே நிகழ்ந்துவிடும்.

ஒரு பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம். கருவை சுமப்பதில் ஏதேனும் தவறு இருக்கலாம். இது அரிதாக இருந்தாலும் இதுவும் ஒரு காரணம். கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.

கர்ப்பத்தின் 12 வது வாரங்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியெ இவை பெருமளவு நிகழும் என்பதால் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

கருவானது சரியான காலத்தில் வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகிறது. எனினும் பெரும்பாலும் கருச்சிதைவுகளில் சுமார் 50 சதவீதம் குரோமோசோம்களுடன் தொடர்பு கொண்டது.

குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாகக் கூடும். கருமுட்டை வெளுத்து காணப்படுவது, கரு உருவாகாத போது கருமுட்டை உண்டாவது. கர்ப்பகாலத்தில் ரத்த போக்கு உண்டு என்றாலும் அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

 சில துளி ரத்த போக்கு வந்தாலே மருத்துவரை அணுகினால் கரு பாதிப்பு இருந்தாலோ கரு சேதமடைவதாக இருந்தாலோ காப்பாற்ற வாய்ப்பு உண்டு.

சில சமயங்களில் கருவை தாங்கும் வலுவுக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் காரணமாகும். கருச்சிதைவு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது. அல்ட்ரா சவுண்ட்டு பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும்.

கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையும் கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்பபையில் பிரச்சனைகள், கர்ப்பப்பை அசாதாரணங்கள், பலவீனமான கர்ப்பப்பை வாய் திசுக்கள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க கூடும். அதே நேரம் கர்ப்பகாலத்தில் எந்தவிதமான வேலையும் செய்யக்கூடாது எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் தங்கள் மருத்துவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தாத பட்சத்தில், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை தாராளமாக பார்க்கலாம். அதிக எடை தூக்குவது, அதிக நேரம் நிற்பது, அதிகம் பயணிப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆனால் கர்ப்பகாலத்தில் ஜாகிங், சைக்கிள் பயிற்சி, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால், ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

அதேபோன்று அதிக பளு தூக்கும் பணி அல்லது அதிக அளவு பணி செய்பவர்கள் கருச்சிதைவு குறித்து பயம் இருந்தால் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

Tags:    

Similar News