பெண்கள் உலகம்

பெண்களுக்கு கைக்கொடுக்கும் குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்கள்

Update: 2022-09-30 04:56 GMT
  • நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.
  • எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும்.

வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள். ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.

டிஜிட்டல் கல்வி

வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. உலகில் பலரும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு மென்பொருளில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதையே ஒரு படிப்பாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது அல்லது ஆன்லைனில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பெரும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

கைவினை பொருட்கள்

உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை உற்பத்தி செய்துவிட்டு ஆன்லைனில் விற்கலாம். இதற்காக பல்வேறு இணையதளங்கள் செயலிகள் உள்ளது. இதற்கும் பெரிய முதலீடுகள் தேவை இருக்காது.

பேக்கரி

உங்களுக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இதுபோன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும். நிறைய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது உங்களுக்கு தெரியும் என்றால் அதற்கான சேவையை நீங்கள் வழங்கலாம். பல்வேறு சிறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையை நாடுகின்றனர். இதன் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

இதுபோன்று குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

Tags:    

Similar News