பெண்கள் உலகம்

பீரியட்சுக்கு முன்பே உடலை தயார்படுத்துவது எப்படி?

Published On 2024-03-19 09:38 GMT   |   Update On 2024-03-19 09:38 GMT
  • உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும்.
  • பீரியட்சில் ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று இருக்கும்.

உங்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிடாய் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 4 நிலைகளாகப் பிரிக்கலாம். அதன்படி 1 முதல் 7 நாள்கள் வரை `மென்ஸ்டுரல் ஃபேஸ்', 8 முதல் 13 நாள்கள் வரை `ஃபாலிக்குலர் ஃபேஸ்', அடுத்த 14-21 நாள்கள்வரை `ஓவுலேட்டரி ஃபேஸ்'சும், அதற்கடுத்த நாட்களை, 22 முதல் 28 நாட்கள் வரை `லூட்டியல் ஃபேஸ்' என்றும் சொல்கிறோம்.

மாதத்தின் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடுவது, ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்வது என்றிருக்காமல், மேற்குறிப்பிட்ட இந்த நான்கு நிலைகளுக்கேற்ப உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் மாற்றிக்கொண்டால், பீரியட்ஸ் சுழற்சியில் ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களால் உடல், மனநலனில் ஏற்படும் அசவுகர்யங்களை ஓரளவு சமாளிக்கலாம்.

அதன்படி, 1 முதல் 7 நாட்கள் வரை, பீரியட்சின் போது ரத்தப்போக்கு காரணமாக உடலும் மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும். இந்த நாள்களில் வெதுவெதுப்பான சூப், காய்கறி ஸ்டியூ, இரும்புச்சத்து அதிகமான கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். உடலை வருத்தி செய்கிற உடற்பயிற்சிகளை தவிர்த்து வாக்கிங் போன்ற மிதமான பயிற்சிகளை செய்யலாம்.

8 முதல் 13 நாள்கள் வரையிலான ஃபாலிக்குலர் ஃபேஸ் நடக்கும் போது, ஹார்மோன் அளவுகள் மெள்ள மெள்ள ஏறத்தொடங்கும். அதனால் உங்கள் எனர்ஜி லெவலும் அதிகரிக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். இந்த நாட்களில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சாப்பிடலாம். கடினமான உடற்பயிற்சிகள், நடனம் போன்றவற்றைச் செய்யலாம்.

14 முதல் 22 நாள்கள் வரையிலான ஓவுலேட்டரி ஃபேஸ் நடக்கும்போது, முட்டை விடுவிக்கப்படும் அண்டவிடுப்பு நிகழும். அது சினைக்குழாய் வழியே பயணம் செய்து, உயிரணுவை சந்தித்தால் கருத்தரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும். கற்பனை சக்தியும் அதிகரிக்கும். இந்த நாட்களில் மெக்னீசியம் அதிகமுள்ள டார்க் சாக்லேட், கீரை, முட்டை, காலிஃப்ளவர், ப்ரொக்கோலி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். கடினமான பயிற்சிகளைக்கூட செய்ய உடல் தயாராக இருக்கும்.

23 முதல் 28 நாள்கள் வரை லூட்டியல் ஃபேஸ் எனப்படும் நிலையில், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். எனர்ஜி குறையும். வெளியே செல்ல விருப்பமின்றி, வீட்டிலேயே இருக்கத்தோன்றும். இந்த நாள்களில், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

Tags:    

Similar News