பெண்கள் உலகம்
null

மாதவிடாய் முன்னதாகவே வருவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்!

Published On 2024-05-14 05:58 GMT   |   Update On 2024-05-14 10:30 GMT
  • இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும்.
  • உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சில காரணங்களால், பெண்கள் மாதவிடாயை முன்னரே சந்திக்க நினைப்பர். இந்த நேரங்களில் மருந்து, மாத்திரைகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும். இதில், மாதவிடாய் காலம் சீக்கிரம் வர பெண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இஞ்சி டீ

மாதவிடாய் காலத்தை நெருங்குவதற்கு இஞ்சி டீ ஒரு அற்புதமான தேர்வு ஆகும். ஏனென்றால் இஞ்சி டீ கருப்பையை சுற்றி அதிக வெப்பத்தை உண்டுபண்ணுகிறது. இதனால் மாதவிடாய் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எள்

உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எள்ளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மாதவிடாய் விரைவில் வருவதற்கு ஏதுவாக அமைகிறது.

வைட்டமின் சி பழங்கள்

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களான பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்கள் அடங்கும். பப்பாளி பழமானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடிய கரோட்டின் பழமாகும். இந்த பழங்களை உட்கொள்வதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும்.

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி டீ அருந்துவதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும். தேவையான அளவு கொத்தமல்லி விதைகளை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து நன்கு ஆறிய பிறகு அருந்த வேண்டும்.

பீட்ருட்

பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மாதவிடாயைத் தூண்டக்கூடிய வகையில், பீட்ரூட் பழம் அமைகிறது.

மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், மாதவிடாக் காலத்திற்கு முன்னதாகவே அதனை நெருங்க முடியும்.

Tags:    

Similar News