உடற்பயிற்சி

பிரிதிவி முத்திரை

பல் கூச்சம், ஈறு வீக்கம் பிரச்சனையை குணமாக்கும் முத்திரை

Update: 2022-06-12 02:17 GMT
  • பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.
  • காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானதுதான். அதில் பற்கள் மிக முக்கியமானது. பற்களுக்கும் தலை நரம்பு மண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பற்கள் வலி வருவதற்கும், ஈறுகளில் ரத்தம் வருவதற்கும் காரணம், நமது உணவு முறை, பழக்க வழக்கம். முடிந்த வரை பழம், கீரை, காய்கறிகள் மட்டும் உணவில் உண்ணுங்கள். மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காலை / இரவு வேப்பங்குச்சி வைத்து பல் துலக்குங்கள்.

பல் கூச்சம், ஈறு வீக்கம், பற்களில் ரத்தம் வருவது, பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு யோகா முத்திரையில் தீர்வு உள்ளது.

பிரிதிவி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமருங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

பின் எல்லா கைவிரல் நுனிகளில் ஒரு அழுத்தம் கொடுக்கவும். ஒவ்வொரு கைவிரல் நுனியிலும் ஐந்து முறை (பெருவிரல் ஆள்காட்டி விரலை குவித்து அதன் மையத்தில் கைவிரலை வைத்து அழுத்தம் கொடுக்கவும்)

பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.

15 நாட்களுக்கு ஒரு முறை வேப்ப இலை கொழுந்து காலையில் சாப்பிடவும். வெந்நீர் அதில் உப்பு போட்டு சுடவைத்து ஆறியவுடன், இளஞ் சூட்டில் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். இரவு படுக்குமுன் இதனை செய்யவும்.

கிராம்பு ஒன்று வாயில் ஒதுக்கி அதன் சாறு பற்களில் படும்படி செய்யவும்.

கரும்பு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு அரை துண்டு பற்களில் மென்று சாப்பிடவும்.

சுத்தமான நல்ல எண்ணெய் வாரம் ஒருமுறை வாயில் ஒரு கரண்டி ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதனை கடைபிடியுங்கள் பற்கள் ஈறுகள் சிறப்பாக இயங்கும்.

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News