வழிபாடு

கொடி மரத்திற்கு தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்.

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2023-02-13 08:48 GMT   |   Update On 2023-02-13 08:49 GMT
  • இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
  • 22-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6.15மணிக்கு கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்பாள் பூஞ்சப்பரம், பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம், வேதாள வாகனம், அன்ன வாகனம், மான் வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழாவான 22-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் மகர லக்கனத்தில் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சுப்பிர மணிய சாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன்,இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News