வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-11-28 07:15 GMT   |   Update On 2022-11-28 07:15 GMT
  • சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
  • இந்த கோவிலில் கடந்த ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி நடந்தது. கோவிலின் சிறப்பை கேள்விப்பட்ட பலரும் நாள் தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை மற்றும் மாலையில் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். சபரிமலைக்கு சென்று விட்டு குமரி மாவட்டம் வருகை தந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி மூன்று வாசல்கள் வழியாக சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தற்போது மதியம் 100 பேருக்கு மட்டுமே கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News