வழிபாடு

தூத்துக்குடி-ஆறுமுகநேரியில் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Update: 2022-11-26 06:02 GMT
  • விழா வருகிற 3-ந்தேதி வரை நடக்கிறது.
  • பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய 134-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்குதந்தைகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோன்று ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கொடிகள் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அந்த கொடிகளை திருச்செந்தூர் அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார், காயல்பட்டினம் சிங்கித்துறை பங்கு தந்தை ஷிபாகர் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சிஸ் அடிகளார், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் அடிகளார் ஆகியோர் அர்ச்சித்தனர். இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News