வழிபாடு

ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த காட்சி.

புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

Update: 2022-11-26 03:59 GMT
  • திருவிழா வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
  • 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.

திருவிழா, வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 2-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை கூட்டு பாடல் திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி (சனிக்கிழமை) திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News