வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை

Published On 2022-11-14 05:45 GMT   |   Update On 2022-11-14 05:45 GMT
  • ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார்.
  • லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனையை கோவில் நிர்வாகம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 10 நாள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை நேற்று தொடங்கியது.

கோவிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களுக்கு பின் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் லட்ச வில்லார்ச்சனை, குங்குமார்ச்சனையை நடத்தினர்.

அதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், பிற துறை அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

Tags:    

Similar News