வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

Update: 2022-12-06 04:15 GMT
  • அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
  • சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது.

திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிபெருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா ஆகிய 3 திருவிழாக்களிலும் கொடியேற்றத்துடன் நடப்பது போலவே இந்த 3 திருவிழாக்களிலும் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது தனிசிறப்பு.

திருக்கார்த்திகை திருவிழாவான நேற்று வழக்கம்போல முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.

மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News