வழிபாடு

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Published On 2025-06-30 09:00 IST   |   Update On 2025-06-30 09:00:00 IST
  • மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
  • சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்கள். தேரோட்டம் நிகழ்ச்சி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது. 

Tags:    

Similar News