வழிபாடு

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் தங்க தேரோட்டம் தற்காலிகமாக ரத்து

Published On 2023-07-10 07:01 GMT   |   Update On 2023-07-10 07:01 GMT
  • தங்க தேரோட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோவிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கோவில் இணை ஆணையர் ஹர்ஷினி கூறுகையில், கோவிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மலைக்கோவிலில் தங்கரதம் வலம் வரும் இடத்தில் கருங்கல் தளம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நடைபெறுவதால் தங்க தேரோட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கருங்கல் பதிக்கும் பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் தங்க தேரோட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News