வழிபாடு

திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தலாம்

Update: 2022-12-01 08:08 GMT
  • 6-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
  • தாமிர கொப்பரை 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் 28-ந்தேதிதிருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 6-ந்தேதி மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்காக 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மற்றும் 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் நெய்யால் பதப்படுத்தப்பட்டு திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. கார்த்திகை மகாதீபம் ஏற்றுவதற்கு பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் கோவிலில் "நெய் "காணிக்கை செலுத்தலாம் என்று கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News