வழிபாடு

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவருகிற 6-ந் தேதி நடக்கிறது

Update: 2022-12-02 06:22 GMT
  • சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
  • ரத வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி(ெசவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூ‌ஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், தொடர்ந்து பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும்.

இரவு 8 மணிக்கு கோவிலில் நாரணதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9.30 மணியளவில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவு 10 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

அதை தொடர்ந்து சுவாமி, வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ரத வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News