வழிபாடு

சந்திராஷ்டமம் என்றால் அனைவரும் பயப்பட காரணம்...

Published On 2022-07-04 07:48 GMT   |   Update On 2022-07-04 07:48 GMT
  • ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும்.
  • ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.

நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம். ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.

உதாரணமாக மேச ராசிக்கு, விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும், விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் (விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள், வீண் தகராறுகள், காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம். சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று. அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும் போதே சந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12-ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும்.

சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

Similar News