வழிபாடு

சுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் வஸ்திரங்களை படத்தில் காணலாம்.

அழகர்கோவில் கோவிலில் இருந்து மலேசியா சுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு

Published On 2023-05-18 11:33 IST   |   Update On 2023-05-18 11:33:00 IST
  • தமிழகத்தில் உள்ள 4 கோவில்களில் இருந்து இந்த வஸ்திர புறப்பாடு வெளிநாட்டிற்கு செல்கிறது.
  • கோவிலில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜை செய்து வஸ்திர புறப்பாடு நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள கோவிலுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர புறப்பாடு நடைபெறும் என்று தெரிவித்தார்.

அதன்படி திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் இருந்து மலேசியா நாட்டின் சிலாங்கூரில் அமைந்துள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு இன்று நடந்தது.

இதில் கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராமசாமி, அர்ச்சகர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவிலில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜை செய்து வஸ்திர புறப்பாடு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 4 கோவில்களில் இருந்து இந்த வஸ்திர புறப்பாடு வெளிநாட்டிற்கு செல்கிறது. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலில் இருந்து வஸ்திர புறப்பாடு நடந்தது.

Similar News