வழிபாடு
கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு காரணங்கள்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு காரணங்கள்

Published On 2022-05-05 11:33 IST   |   Update On 2022-05-05 11:33:00 IST
தமிழகத்தின் பழமை வாய்ந்த விழாக்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன
தமிழகத்தின் பழமை வாய்ந்த விழாக்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். சுமார் 1 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழும் இந்த திருநாள், மதுரையில் பழம் பெருமையை விளக்கும் விழாவாகும். இருசமயங்கள் தொடர்புடைய விழாவாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விளங்குகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

துர்வாச முனிவரால் தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ் முனிவருக்கும் (மண்டுக முனிவர்) நாரைக்கும் சாபவிமோசனம் கொடுக்கவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டும் கள்ளழகராக மதுரை வரும் சுந்தர்ராஜ பெருமான் வைகை ஆற்றில் எழுந்தருளினார் என்பது கோவில் வரலாறு கூறும் தகவல்.

தன் தங்கையான மீனாட்சியின் திருமணத்தைக் சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. அதனால் இன்றளவும், சித்திரை மாதம் பிறந்ததுமே மதுரைக்காரர்களை மற்றவர்கள் கேட்கும் கேள்வி. மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிறார் என்பதுதான். இந்த கேள்விக்கான பெருமை திருமலை நாயக்கரையே சாரும்.

Similar News